அரச தலைவர்களுக்கும் பொது மக்களின் கூச்சல் சப்தம் வெகு விரைவில் வரும்- சுசில் எம்.பி.


Ranil-maithree-650x365

பொது மக்கள் மேடையில் அமைச்சர்களுக்கு எதிராக போடப்படும் கூச்சல் சப்தம், நாட்டுத் தலைவர்களுக்கும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மக்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாத அமைச்சர்கள் தான் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.  ஊடகவியலாளர் சந்திப்புக்களில் இந்த அமைச்சர்கள் திண்டாடுகின்றார்கள். காலியில் வைத்து அமைச்சர் ஒருவரது பொது மக்கள் கூச்சல் போட்டனர். நேற்றும் ஒரு முக்கிய அமைச்சர் ஒருவருக்கு ஹோமாகம பகுதியில் வைத்து கூச்சலிட்டதை பார்த்தோம்.

இந்த அமைச்சர்களுக்கு எதிராக வைக்கும் கூச்சல் குறித்து அரச தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வில்லையாயின், அரச தலைவர்களுக்கும் அது நாளை வரும் எனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>