கட்டுநாயக்க அதிவேக வீதி பயணிகளின் கவனத்திற்கு


katunayake-highway

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் எதிர்வரும் ஒக்டோபர் 04ம் திகதி வரையில் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் கட்டுநாயக்க நோக்கிய திசையில் சுமார் 200 மீட்டர் வரை நீளத்திற்கு பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>