டிரம்பின் பொருளாதார கொள்கையே டொலர் விலை உயர்வுக்கு காரணம் – கலாநிதி ஹர்ஷத சில்வா


Harsha-de-Silva-1

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் இந்த டொலர் விலை உயர்வுக்கு காரணமாகும் எனவும், இந்த விலை அதிகரிப்பு பிராந்திய நாடுகளையும் பாதித்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி ஹர்ஷத டி சில்வா தெரிவித்தார்.

பிராந்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பண வீக்கங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ரூபா பலவீனப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள ரூபாவின் வீழ்ச்சியானது 8 வீதம் மாத்திரமே ஆகும்.

நேற்று வரையில் இந்தியாவில் 13.12  வீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 11.22 வீதமும், இந்தோனேஷியாவில் 9.61 வீதமும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதனுடன் ஒப்பிடுகையில் ரூபா பலமான நிலையிலேயே உள்ளது.

டொலர் விலை வீழ்ச்சியினால் பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் போது பாதிப்பு உள்ளது போன்று, நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது நன்மையும் உண்டு என்பதை பார்க்க தவறக் கூடாது.

நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.  (மு)

 

One comment

  1. ஏண்டாடேய் எவனோ ஒருவனின் பொருளாதாரக்கொள்கையை வைத்தா எமது பொருளாதாரக்கொள்கையை வகுக்கிறது.
    உங்களிடம் சொந்தகொள்கையில்லாத நீங்க ஏண்டா ஆட்சியில்?

    வங்கிக் கொள்ளைக்கு நிறைந்த கொள்கை இருக்கு.
    போங்கடா நீங்களும் உங்கட ஆட்சியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>