இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய ரீதியிலான ‘தியாக தீபம்’ கௌரவிப்பு விழா நாளை


Star award against curtain background

இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய ரீதியிலான ‘தியாக தீபம’ கௌரவிப்பு விழா நாளை சனிக்கிழமை (22) காலை 8.30 மணியளவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஏ.பி. கமால்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் இவ்விழாவின் விஷேட அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் கலந்துகொள்ளவுள்ளதுடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விக் கல்லூரிகளின் பீடாதிபதிகள், ஆசிரிய கலாசாலையின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகவும், அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவின்போது துறைசார் ஆளுமைகள் பலர் ‘தியாகத் தீபம்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் இவ்விழா ஏற்பாட்டுக்கான அனைத்துப் பணிகளையும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக சங்கத்தின் தேசியத் தலைவர் ஏ.பி. கமால்தீன் தெரிவித்தார். (நு)

– எம்.என்.எம்.அப்ராஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>