அக்குறணையில் சமாதான நடைபவனி (PHOTOS)


IMG_20180921_093953

அக்குறணை சர்வ மத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கு இடையிலான சமாதானம், புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்று (21) சமாதான நடைபவனி அக்குறணை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சமாதான பேரணி சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இச்சமாதான வீதி நடைபவனி ஊர்வலமாக அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி அருகாமையில் மு.ப 9.00 மணிக்கு ஆரம்பித்து இனங்களுக்கு இடையிலான சமாதானம், புரிந்துணர்வை ஏற்படுத்தும் பதாதைகளை ஏந்தியவாறு அக்குறணை நகரின் பொதுச் சந்தை கட்டிட தொகுதி வரை வருகை தந்தது.

அக்குறணை பொதுச் சந்தை கட்டிட தொகுதி அருகே மும்மத தலைவர்களின் பங்கேற்புடன் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் வலியுறுத்தும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

சமாதான நடைபவனியில் தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய மூவினங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், அக்குறணை பிரதேச சபை தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் அங்கத்தவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், சமூக நல அமைப்புகளின் அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், பிரதேச வாசிகள் உட்பட பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

சமாதான நடைபவனிக்கு அளவதுகொடை பொலிஸ் நிலையம், அக்குறணை பிரதேச செயலகம் ஆகியனவும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததுடன், இறுதியாக சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன் சமாதான நடைபவனி நிறைவுபெற்றது. (நு)

– ராபி சிஹாப்தீன் –

IMG_20180921_093953

IMG_20180921_114153

IMG_20180921_114243

IMG_20180921_114800

IMG_20180921_114843

IMG_20180921_114910

IMG_20180921_115258

IMG_20180921_121440IMG_20180921_105204

IMG_20180921_124029

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>