இன்றிரவு பல பிரதேசங்களுக்கு கடும் மழை பெய்யும்- வ.தி.


rainy weather

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றிரவு  (21) அதிகளவு மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வகையில், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களுக்கே மழை பெய்யவுள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதி முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பல பிரதேசங்களுக்கும் மழை பெய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>