கிராமிய வலுவூட்டும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான வீடியோ மற்றும் டிஜிட்டல் பயிற்சிநெறி


wpid-7C8A4746.jpg

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடன், ஐரெக்ஸ் (IREX) நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் நிறுவனத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராமிய வலுவூட்டும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான வீடியோ மற்றும் டிஜிட்டல் கருவிகளை கையாளுதல் தொடர்பான பயிற்சிநெறி நீர்கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

வைப்ரண்ட் வொய்ஸ் (Vibrant Voice) என்ற தொனிப்பொருளில் கிராமிய பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களது கருத்துக்களையும் அரச ஆட்சியில் உள்வாங்கும் பொருட்டு நான்கு நாள் வீடியோ மற்றும் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பயிற்சி நெறியானது நேற்று முன்தினம் 20 ஆம் திகதி முதல் நீர்கொழும்பு கோல்டன் ஸ்டார் ஹோட்டலில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சி நெறிக்கென ஆரம்ப கட்டமாக பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு மாவட்டகளிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் 15 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி நெறியில் புதிய ஊடகம், சமூக ஊடகம், இலவச மென்பொருள்கள், வீடியோ கருவிகளை கையாளுதல், நேர்காணல் ஒன்றை சிறப்பாக பதிவு செய்தல், வீடியோக்களை மாற்றம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இறுதியாக பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் ஊடாக பெண்களின் தேவை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான 30 வீடியோ கதையாக்கங்கள் உருவாக்கப்படவுள்ளதுடன் அதற்கான களரீதியான உதவிகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் நிறுவனம் வழங்கவுள்ளது. (நு)

– ராபி சிஹாப்தீன் –

One comment

  1. 20 வருசம் தகவல் தொழிநுட்ப்பம் பயன்பாடு வந்து முடிந்து இன்னும் இலங்கையில் பேனாவும் பேப்பரும் அரச அலுவளகங்களில் காணப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>