இலங்கை வங்கி கிழக்கு மாகாண அலுவலகமும், மேற்தரக் கிளையும் திறந்துவைப்பு


dfsf

இலங்கை வங்கி கிழக்கு மாகாண அலுவலகமும் திருகோணமலை மேற்தரக் கிளையும் இன்று (03) திருகோணமலை பிரதான வீதி இல. 55 எனும் முகவரியில் அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் உத்தியோகபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இம் மாகாண அலுவலகமும் மேற்தரக் கிளையும் பசுமை நிறைந்த வங்கியியல் எண்ணக்கருவை கொண்டதுமான நவீன ரக தன்னியக்க இயந்திரங்களைக் கொண்டதுமாகும். இக் கிளையினுள் ஸ்தாபித்துள்ள ஸ்மார்ட் வலயமானது வாடிக்கையாளர்களுக்கு வசதியான விடயத்தில் 24 மணி நேரமும் வருடத்தில் 365 நாட்களிலும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது.

கிளையில் இப்பிரதேச மக்களின் நலன் கருதி உள்நாட்டு வெளிநாட்டு நாணய, சேமிப்பு, வங்கிக் கடன்கள் உட்பட புதிய சேவையான என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்ட பிரிவு , காசாளர் வைப்பிலிடும் பிரிவு உட்பட பல புதிய சேவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் சீ பெரேரா, இலங்கை வங்கி பொது முகாமையாளர் செனரட் பண்டார உட்பட முன்னாள் கிழக்கு மாகாண காணி போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலபதி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருணசிறிசேன, திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா, அரச உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். (நு)

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

dfsf

jsn

kjb

jhgj

jka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>