2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு (VIDEO)


nobel peace prize 2018

2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. அவ்வகையில், 2018ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.

கொங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத் ஆகியோருக்கு சமாதான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போரின் போது பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். கொங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக சமாதான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகள் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர்.

பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாதியா முராத்க்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)


nobel peace prize 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>