இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே-இம்ரான் எம்.பி


42479353_842661565937225_9052120412179136512_n

இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். நேற்று காலை சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்,

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் அரசாங்கமுமே இன்று பதவியில் உள்ளது. ஆனாலும் துரதிஷ்டவசமாக தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட காரணத்தால் ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் நல்லாட்சிக்கு எதிராக செயல்பட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று அமைச்சரவையில் உள்ளனர்.

இவர்களே அன்று முதல் இன்று வரை நல்லாட்சி அரசின் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சரவையில் இவர்கள் காணப்படுவதாலேயே பல நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. இவர்களின் ஒரே நோக்கம் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை வழக்குகளில் இருந்து பாதுகாப்பதாகும்.

இதனாலேயே மாதமாதம் மகிந்தவை பிரதமாக்கிறோம் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர். பொதுத்தேர்தலில் மகிந்தவை பிரதமராக்கிறோம் என கூறி வாக்கு கேட்டனர் முடியவில்லை. அதன்பின் ஜனாதிபதியின் உதவியை நாடினர் அப்போதும் முடியவில்லை. இறுதியாக ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கவிழ்ப்போம் என கொழும்புக்கு வந்து மண்கவ்வினர்.

இப்பொழுது சுதந்திர கட்சி தனி அரசாங்கம் அமைக்க இடைக்கால அரசு என்று மீண்டுமொரு நாடகத்தை நடாத்தி மகிந்தவை பிரதமாராக்க ஜனாதிபதியின் உதவியை நாடியுள்ளனர். இடைக்கால அரசாங்கம் என்ற கதையும் இவர்களின் வழமைபோன்று அரசியல் பரபரப்பை ஏற்படுத்த பேசும் தலைப்பே தவிர இது எந்த வகையிலும் சாத்தியமாகாத ஒன்று.

இவர்கள் என்ன செய்தாலும் ஐக்கிய தேசிய கட்சியால் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும். அதுவே என்னை போன்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.

ஆகவே இவர்கள் மாதமொருமுறை மஹிந்த பிரதமர் என்ற கதையை வெவ்வேறு திரைக்கதைகளில் கொண்டுவருவார்கள். ஆனால் இவர்களின் இந்த எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்பதை மட்டும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>