“அக்குறணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட பிங்கா ஓயா கரையில் அமைந்துள்ள 113 சட்டவிரோத கட்டிடங்களே காரணம்”


DSC05785

அக்குறணை நகரில் பல வருடங்களாக தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரி அக்குறணை சிவில் அமைப்புகள் அக்குறணை நகரில் நேற்று (08.10.2018) ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பத்து நாட்கள் கடந்தும் இதுவரை குறித்து பிரதேச அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகளினால் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் கோரினர்.

ஒரு சில அதிகாரிகள் சட்ட விரோத நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்குவதால் முழு அக்குறணை நகரும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

பெருந்தொகையான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் இதனால் கண்டி மாத்தளை பிரதான பாதையில் வாகனங்கள் செல்ல முடியாது சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

சிவில் அமைப்புக்கள் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரியவிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களினால்
கையளிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் இரு முறை வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளதாகவும் கடந்த 1996 முதல் முதன் முதலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இது வரை சுனார் 17 தடவைகள் நகர வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் கருத்து வெளியிடுகையில்;
பேராதனைப பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி வெள்ளப் பெருக்கு ஏற்பட பிங்கா ஓயா கரையில் அமைந்துள்ள 113 சட்டவிரோத கட்டிடங்கள் காரணம் என அடையாளம் காணப்பட்டு அதனை அகற்ற பிரதேச சபைக்கு நடவடிக்கை எடுக்கும் படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சகல தரப்புடனும் இணைந்து செயலாற்ற தாயார் எனவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நகரின் கடைகள் மூடப்பட்டிருந்ததுடன் நகரின் வழமையான நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது. (நு)

– ராபி சிஹாப்தீன் –
akurana protest1DSC05785akurana protestakurana protest2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>