சவுதி தலைமையின் உத்தரவுக்கமைய ஜமால் கசோஜி கொலை ! – துருக்கி அதிகாரிகள் தெரிவிப்பு


ISTANBUL, TURKEY - OCTOBER 08:  A man holds a poster of Saudi journalist Jamal Khashoggi during a protest organized by members of the Turkish-Arabic Media Association at the entrance to Saudi Arabia's consulate on October 8, 2018 in Istanbul, Turkey. Fears are growing over the fate of missing journalist Jamal Khashoggi after Turkish officials said they believe he was murdered inside the Saudi consulate. Saudi consulate officials have said that missing writer and Saudi critic Jamal Khashoggi went missing after leaving the consulate, however the statement directly contradicts other sources including Turkish officials. Jamal Khashoggi a Saudi writer critical of the Kingdom and a contributor to the Washington Post was living in self-imposed exile in the U.S.  (Photo by Chris McGrath/Getty Images)

காணாமல் போன சவுதிஊடகவியலாளர் ஜமால் கசோஜி தொடர்புடைய சிசிடிவி காணொளியை துருக்கி ஊடகம் வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் சவூதி உளவு அதிகாரி என கருதப்படும் ஒருவர் துருக்கிக்குள் இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வந்து செல்லும் காட்சி காணப்படுகின்றது.

சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், கடந்த ஒக்டொபர் 2 ஆம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றதன் பின்னர் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், சவுதி அரசின் உயர் மட்ட உத்தரவுக்கமைய சவுதி தூதரகத்துக்குள் வைத்து அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் காணாமல் போவதற்கு முன்னர் தூதரகத்தை விட்டு வெளியேறியதாகவும், கொலை குற்றச்சாட்டை மறுப்பதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.

இதேவேளை, சவுதியின் இந்த மறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான தகுந்த ஆதரங்களை வழங்குமாறு துருக்கி ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளியில் கறுப்பு வேன் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள், சவுதி ஆண்கள் குழுவொன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் ஊடக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில், பதினைந்து பேர் கொண்ட உளவுக் குழு ஒன்றை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள்தான் ஜமால் காணாமல் போன விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்றும் துருக்கி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக துருக்கி காவல்துறை 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வுக்கு உட்படுத்தவுள்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

– நுஸ்கி முக்தார் –

7f9c43a8-b55b-4a54-86ab-cf3e44ae9c5f

_103795634_saudi_journalist_640-nc_103793841_mediaitem103793840

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>