எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைப்பது அவசியம்- தே.ஆ.


Election commission sri lanka

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு அவசியம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (11) அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் அறிவித்துள்ளது.

இந்த குழுவின் அறிக்கையை வழங்க இன்னும் மேலதிகமாக இரண்டு மாத கால அவகாசத்தை வழங்க வேண்டும் என பிரதமரின் செயற்குழு விடுத்திருந்த கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை தயார் செய்து கொள்வதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என  கட்சி செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் கடையில் புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் கட்சி செயலாளர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>