‘ஊடகவியலாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சவுதியை கடுமையாகத் தண்டிக்கும்’ – டிரம்ப்


trump

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜியின் மரணத்துக்கு சவுதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சவுதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை இரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை,” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து “உண்மையை” தெரிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று தான் அச்சப்படுவதாகவும், மேலும் இது “வழக்கமான ஒன்றாக மாறிவிடும்” என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ கட்டர்ஸ் ‘பிபிசி’ செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>