‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – ரிஷாட்


7M8A3167

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் {China National Agriculture Wholesale Market Association (CAWA)} தலைவர் ஷின்ஜுன் மா (Zengjun Ma) தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்று முன்தினம் (15) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்திக்க வந்திருந்த போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் (Fresh produce sector) ஒரு பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்திருக்கிறது. சமீபத்திய புதிய நவீன தொழில்நுட்பத்துடன் பங்குதாரர்களை இலங்கை விநியோகஸ்தர்களுடன் இணைத்து, இலங்கையில் ஒரு கூட்டு முயற்சிக்கு முதலீடு செய்ய, சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் உறுப்பினர்களை நாம் அழைக்கின்றோம்” என இதன்போது அமைத்ச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த இச்சந்திப்பில், இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சோனாலி விஜேரத்ன மற்றும் அத் திணைக்களத்தின் பல அதிகாரிகளும், சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளும் இணைந்துகொண்டனர். (நு)

7M8A3167

7M8A3163 (1)

7M8A3117

7M8A3151

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>