ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமருடன் அவசர கலந்துரையாடல்


image_96932cc482

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) மாலை  இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை தொலைபேசி ஊடாக மேற்கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் உளவுப் பிரிவான “ரோ” அமைப்பு தன்னைக் கொலை செய்ய சதி செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை உட்பட ஊடகங்கள் பலவற்றிலும் இன்று (17) செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் இந்தியாவின் தலையீடு தொடர்பிலும் ஜனாதிபதி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளன.

இன்று மாலை நடைபெற்ற இந்த தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, இன்று காலை இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சன்டுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>