வீடுகள் அற்ற மேசன் மார்களுக்கு 500 வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் மெல்பன் மெற்றல்


MELBN to build 500 houses for meson bass across the nation (1)

மெல்பன் மெற்றல் – நிறுவனம் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் அற்ற ஏழை மேசன் மார்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டியெழுப்துவதற்கான தி்ட்டம்மொன்றை வகுத்துள்ளது.

இந்த நாட்டில் பல மாடி வீடுகளைக் கட்டியெழுப்பும் மேசன் மாா்கள் தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தமது குடும்பங்களுடன் படும் கஷ்டங்களை நேரடியாக அவதானித்த மெல்பன் உருக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹம்மட் றம்ஸி இவ்வாறான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இத்திட்டத்தில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்ததாக ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படுவதுடன் அவர்களது பிள்ளைகளின் கல்விக்காக 25,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வீடு நேற்று (17) திக்வல்லையில் உள்ள வத்தேகம எனும் பிரதேசத்தில் வாழும் ஒரு ஏழை மேசனின் குடும்பத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கிறிக்கட் குழுவின் முன்னாள் தலைவர் குமாா் சங்கங்கார, மெல்பன் மெற்றல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டா் மொஹமட் றம்ஸி மற்றும் மெல்பன் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர். (நு)

– அஷ்ரப் ஏ சமத் –

MELBN to build 500 houses for meson bass across the nation (1)

MELBN to build 500 houses for meson bass across the nation (2)

MELBN to build 500 houses for meson bass across the nation (4)

MELBN to build 500 houses for meson bass across the nation (10)

MELBN to build 500 houses for meson bass across the nation (7)

MELBN to build 500 houses for meson bass across the nation (8)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>