இங்கிலாந்துடனான ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி சாதனை !


partner

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்  இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 366 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (23)  பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்ற இப்போட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

இதன்படி, இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய ஒரு நாள் போட்டியின் ஓட்ட எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வீரரும் சதம் அடிக்காமல் ஒரு அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்யில் பெற்றுள்ள 3 ஆவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவென பதிவாகியுள்ளது.  (மு)

 

3 comments

  1. இதென்னடா ரோதனையா கிடக்கு

  2. ஷாபபபபாஹ்

  3. Qutar la malai pola than iduvum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>