அமைச்சர்களுக்கு ரோ வுடன் தொடர்பு இல்லை, குற்றச்சாட்டு அர்த்தமற்றது- பொன்சேகா


sarath-fonseka-first-press-conference-after-release-from-bail-2

இந்திய ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியதற்காக அமைச்சர்கள் இந்திய புலனாய்வு அமைப்பான ரோ வுடன் தொடர்பு இருப்பதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும் என பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலை சதித்திட்டத்தில் இந்தியாவின்  ‘ரோ” புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்புள்ளதாக ஜனாதிபதி கூறியதாக அமைச்சர்கள் நால்வர் இந்திய ஊடகத்திற்கு அறிவித்தார்கள் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறியதற்காக இந்நான்கு அமைச்சர்களுக்கும் குறித்த அமைப்புடன் தொடர்புள்ளது என குற்றஞ்சாட்ட முடியாது. அவ்வாறான குற்றசாட்டுக்களை ஏற்றக்கொள்ளவும் முடியாது என்று

‘ரோ” அமைப்பு  இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்வதற்கு வாய்ப்பு இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று(23)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் கலந்தரையாடப்படும் விடயங்களை தனிப்பட்ட ரீதியில் ஊடகங்களுக்கு தெரிவிப்பதென்பது ஓழுக்குக்கு முரணான செயற்பாடாகும்.

அதற்காக, ஊடகவியலாளருடன் தொடர்புக்கொண்டு இதுபோன்ற தகவலை பரிமாற்றிக்கொண்டார்கள் என்பதற்காக அவர்கள் நாள்வரையும் ‘ரோ” அமைப்புடன் தொடர்புபடுத்திக் கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>