அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்


Minister_Patali_Champika_Ranawaka1

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வெற்றி கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காணப்படும் பிரேரணைகளை நீக்கிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தான் ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் கூறியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

 

2 comments

  1. உண்மையின் நிறம் வெளியில் வருகிறது

  2. Jahwadayooo no need to Sri Lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>