இலங்கை விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் – வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் சபாநாயகர் வேண்டுகோள்


BS8A0867

சபாநாயகர் கரு ஜெயசூர்யவுக்கும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத அரசியல் மாற்றம் தொடர்பில் தமது கவலையடைவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலைமை காரணமாக நாட்டுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் உயர் அதிகாரிகள் சபாநாயகருக்கு எடுத்துரைத்தனர்

இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாகவும், குறித்த சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் யாப்புக்கு அமையவும், ஜனநாயக முறையிலும் விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை அவசரப்பட்டு இலங்கைக்கு எதிராக எந்தவொரு இராஜதந்திர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியூ (Margue), பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டேயுரிஸ் (James Dauris), கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் ( David Mackinnon ) ஜேர்மன் தூதர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.(ஸ)

BS8A0867 BS8A0846

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>