சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவனல்லை உயன்வத்தையில் மருத்துவ முகாம்


b965f33d-9131-4f65-b588-735661ea755c

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவனல்லை உயன்வத்தை அல் ஹிக்மா பாலர் பாடசாலையில் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் ஒரு அங்கமாக 50 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஓர் அரிய வாய்ப்பாக உயன்வத்தை நூராணியா மு.ம.வி இல் Help To Elders என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்று உயன்வத்தை சுகாதார ஒன்றியம், மாவனல்லை மருத்துவ ஒன்றியம், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உயன்வத்தை கிளை, இளைஞர் விளையாட்டுக் கழகம், உயன்வத்தை ஜம்மிய்யா ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் கண் பரிசோதனை, ECG, Dental, NCD Screening (Blood pressure, BMI), FBS , UFR போன்ற குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் அதன் முடிவுகளும் விஷேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் மூலமாக நிகழ்த்தப்பட்டன.

இதேவேளை, விழிப்புணர்வு நிகழ்வில் வயோதிபர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ஸுzல்பி மரிக்காரின் தலைமையில் கலந்துரையாடலும் மேலும் மாதவிடாய் நிறுத்தம் சம்பந்தமான விஷேட அறிவூட்டல் நிகழ்ச்சி ரஜரட்டை மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர் அப்ஸல் மூலமாகவும் வெற்றிகரமாக நடாத்தி வைக்கப்பட்டது. (நு)6feea305-8961-45a4-a802-81248f2067cf

d9f8d058-11ca-4a3f-a06c-c1eebbc24ecc

dcc9311c-d35c-48a0-93f3-925ab9fc592e

b965f33d-9131-4f65-b588-735661ea755c

59f1a30a-1f33-4372-83a8-708a84fededa

a99fca15-7cd5-4d80-8260-55469e820adf

d84648e1-71c9-4be7-b3c2-cf16ea2b67d3

ec0df395-1d12-4804-bd29-fb9643e74a12

485770b2-f58e-44e4-8f07-386fe2ae8214

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>