மஹிந்தவுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டணியின் வாக்கு – இறுதித் தீர்மானம்


tna

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் பிரதமராக இருந்தவரை நீக்கியமை என்பன அரசியலமைப்புக்குப் புறம்பானது எனவும் அது ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்தின் உயர் தன்மைக்கும் பாதிப்பானது எனவும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2 ஆம் திகதி மாலை கூடி எடுத்த தீர்மானம் இது எனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து விட்டு, பின்னர் அவருக்கு பெரும்பான்மையைப் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும், அவ்வாறான நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தமது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அகப்பட்டமை கண்டிக்கத் தக்கது எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால், இந்த சட்ட முரணான பிரதமர் நியமனத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், இது போன்ற நடவடிக்கைகளின் போது மத்தியஸ்தம் வகிப்பது அராஜகம் வெற்றி பெற உடந்தையாக இருப்பதற்கு சமமான ஒரு செயலாகும் எனவும் அக்கூட்டணி மேலும் அறிவித்துள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>