ஈராக் தொடர் குண்டுத் தாக்குதல், 6 பேர் பலி, 15 பேர் காயம்


ewa

ஈராக்கில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கின்  வடக்கு பாக்தாத்,  ஏடன் நகரில் பஸ் நிலையத்துக்கு அருகே முதலாவது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலின் போது 2 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.  பின்னர் தர்மியா நகரில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது வெடித்த குண்டில் ஒரு இராணுவ வீரரும், அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் கார் சாரதியும், சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவங்களில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>