இளம் ஊடகவியலாளர்களுக்கான ‘MediaCorp’ நிகழ்ச்சித்திட்டம்


45167929_2145737355456528_850199032625102848_n

ஸ்ரீ லங்கா அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் (SDJF) நடாத்தும் ‘MediaCorp’ விருது நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக 3 நாள் வதிவிட பயிற்சிப்பட்டறை அண்மையில் இடம்பெற்றது.

ராஜகிரிய ரிவர் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடுபூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்கள் சுமார் 36 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ‘MediaCorp’ அறிமுகம், பன்மைத்துவம், இன நல்லிணக்கம், போருக்குப் பின்னரான சூழ்நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள் தொடர்பில் கதையாக்கங்களை தயாரித்தல், ஊடக ஒழுக்க கோவை, SMART கையடக்க தொலைபேசியினூடாக ஊடகவியல் மற்றும் தொழில் நுணுக்கங்கள் என்பன பயிற்சியளிக்கப்பட்டது.

இதில் வளவாளர்களாக அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வினை ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டம் (USAID), சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை சபை (IREX) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ லங்கா அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-நுஸ்கி முக்தார்-
45167929_2145737355456528_850199032625102848_n

7

2

4

8

3

9

45167929_2145737355456528_850199032625102848_n (1)

45195564_2147199251977005_849822991058468864_n

45228791_2147190258644571_7241403118338965504_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>