போலி நாணயத் தாள்களுடன் இளைஞன் கைது


image_032892e57d

திருகோணமலை, கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் போலி நாணயத் தாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (08) காலை கைது செய்யப்பட்டதாக கந்தளாய் தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், தம்பலகாமம் தாயிப் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் எனவும், இவரிடமிருந்து பத்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>