ஜனாதிபதி பாவம் இழைத்தவராகின்றார்- பேராசிரியர் உயன்கொட


aswer

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தையே முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார்.

மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு இன்று(08) வியாழக்கிழமை புதிய நகர மண்டபவத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாகவும், ரணிலை பிரதமராக்குவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இப்போது அனைத்தையும் மறந்து, நிறைவேற்றதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

aswer

3 comments

  1. இப்ப சனாதிபதியப் பத்தியும் சனநாயகம் பத்தியும் மூச்சுக்கு முன்னூறு தரம் பேசுங்க. பள்ளிய ஒடெக்கக்கொள்ள- அத அவரும் ரணிலும் பாத்துக்கு வாயில வெரல வெச்சிச் சூப்பிக்கிரிக்கக்கொள்ள நீங்க கவுட்டுக்க கய்ய வெச்சிக்கிப் படுங்க.

    ஜனாதிபதிக்கு மக்கள் நிறைவேற்றதிகாரத்தைக் கொடுத்துள்ளார்கள். அதை அவர் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகிறார் என்றால் அதற்குரிய பரிகாரத்தை/பதிலடியை அடுத்த தேர்தலில் மக்கள் கொடுக்கட்டும். அதுவரை. அவருக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை அவர் சரி எனக் கருதுகின்ற விதத்தில் உபயோகிக்க முழு உரித்துடையவர், முற்றுப்புள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>