தோழி.lk – புதிய இணையம் அறிமுகம்


Screen Shot 2018-11-09 at 10.56.46 AM

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையிலுள்ள பெண்களின் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வை ஆதரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமான Yeheli.lk/Thozhi.lk இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் அகற்றுவதற்கு நாட்டிலுள்ள ஒரு முன்னணி அமைப்பான “Women in Need”உடன் இணைந்து இச்சேவையை வழங்குகின்றது.

Yeheli தளமானது பங்களாதேசில் உள்ள Mayalogy Ltd நிறுவனத்தின் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகின்றது.

உள்நாட்டு இணையத்தளம் மற்றும் ஆன்ரோய்ட் ஆப் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள கூடியதுடன் பெண்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அணுகுவதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான இடத்தினை உருவாக்கியுள்ளதுடன் அவர்களின் உடல் மற்றும் உணர்ச்சி, ஆரோக்கியம் தேர்வுகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய அதிகளவான அறிவினை பெற்றுக்கொள்ள முடியும். கலாச்சார கட்டுப்பாடுகள், உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக பாலியல் மற்றும் மன ஆரோக்கியம்) வீட்டு வன்முறை மற்றும் இணைய வழி துன்புறுத்தல்கள், பெண்களும் மற்றும் சிறுமியர்களும் துஷ்பிரயோகம் போன்ற உணர்ச்சி பூர்வமான சிக்கல்களை கையாளும் திறனை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் கூடிய விடயங்களை பற்றி விவாதிக்க அல்லது கற்றுக்கொள்ள இந்த தளத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் அனுபவம் பெற்ற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆலோசகர்களிடமிருந்து உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒரு சில மணித்தியாலங்களில் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

தெற்காசிய பிராந்தியத்தில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தோழி போன்ற தளங்களினூடாக மருத்துவம், சட்டம், சமூக உளவியல், அழகு சார்ந்த விடயங்கள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். தோழி App இனை டவுன்லோட் செய்ய Google Play Store க்கு அல்லது https://yeheli.lk/ க்கு விஜயம் செய்யுங்கள். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>