ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (Video)


_DSC0184

முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஊடக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹாதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் துருக்கி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கையிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைக்கான துருக்கி தூதரகமும் துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையமும் (Turkish Cooperation and Coordination Agency – TIKA) இந்த ஊடக உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.

முஸ்லிம் ஊடகவியலாளர்களிடமிருந்து பகிரங்கமாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய முஸ்லிம் மீடியா போரம் மற்றும் துருக்கி தூதரகத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன தெரிவுக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இவ்உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய சுமார் 50க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு புகைப்பட கேமரா மற்றும் மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

படங்கள் – பாறுக் ஷிஹான்

_DSC0031 _DSC0059 _DSC0084 _DSC0108 _DSC0135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>