ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வர்த்தக விருது விழா (Photos)


இலங்கை வர்த்தக துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா நேற்று (12) கொழும்பு, சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களை பாராட்டி விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

“பிஸ்னஸ் டுடே டொப் 30” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழாவில் வர்த்தக துறையில் 2017, 2018 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அடைவுகளை வெளிக்காட்டிய 30 வர்த்தக நிறுவனங்கள் பாராட்டப்பட்டன.

தேசிய பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்து நாட்டின் எதிர்காலத்திற்காக தொடர்ச்சியாக தமது தனிப்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ள கீர்த்திமிக்க தனிநபர்களும் இதன்போது பாராட்டை பெற்றனர்.

இலங்கை வர்த்தக துறையில் முக்கிய அடைவுகளை வெளிக்காட்டிவரும் நிறுவனங்களை பாராட்டி அரச தலைவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த வர்த்தக விருது விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் வர்த்தக துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)

Screen Shot 2018-11-13 at 12.00.08 PM Screen Shot 2018-11-13 at 12.00.01 PM Screen Shot 2018-11-13 at 11.59.55 AM Screen Shot 2018-11-13 at 11.59.51 AM Screen Shot 2018-11-13 at 11.59.42 AM Screen Shot 2018-11-13 at 11.59.36 AM Screen Shot 2018-11-13 at 11.59.26 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>