ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் விடுக்கும் சவால்


Rauff Hakeem

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.

இன்று (15) வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற
ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.

2/3 பெரும்பான்மையின்றி நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கமுடியாது. அப்படியிருந்தும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாகும்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று நான் சவால் விடுக்கிறேன். அதில் எங்களது பலத்தை நிரூபித்து, மக்கள் பலம் என்னவென்பதை நாங்கள் உங்களுக்கு காட்டுகிறோம்.

எனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று (15) பாராளுமன்றத்தில் மிகவும் கீழ்த்தரமான காட்சிகளைக் கண்டேன். தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்கத் திராணியற்ற மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, அடித்து ஆட்சியைப் பெறுமாறு தனது சகாக்களை ஏவிவிட்டு மெதுவாக நழுவிச் சென்றார்.

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும்போது, மக்களது இறைமையை மதித்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கூறினார். நாங்கள் சொல்கின்றோம், மக்கள் இறைமையை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நடாத்த வேண்டியது ஜனாதிபதி தேர்தலாகும். பொதுத் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால், நாட்டில் அரசியல் பிரச்சினையொன்றுக்கு வழிசமைத்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்ட காரணத்தினால் மெதமுலான மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இலகுவாக காவுகொள்ளலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், எங்களின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்களிடம் பறிகொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளமுடிந்தமைக்கு பெருமைப்படுகிறோம்.

இந்த நாட்டிலே 9 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்ற கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை பாதுகாத்துள்ளோம். ஜனநாயகத்துக்கு விரோதமான ஜனாதிபதியின் செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதையும் தெளிவாக சொல்லிக்கொள்கிறோம் என்றார். (ஸ)

20 comments

 1. Summa irunka sir

 2. Iwarukku vote potawangalukku adikkum phodu padavi vilahama.periya sawal viduraru.kandykku test match adikkum phodu police minister ranil.iwar awanku kadaikku poraru.Marhoom Ashrafai phol innum oru muslim talaiwarum uruwaha illai.iwaru ranilku kadaiku porawar.

 3. Sooper leader

 4. மாஷா அல்லாஹ்

 5. முடிந்தால் ஜனாதிபதி தேர்தலை அறிவியுங்கள் -ஹக்கீம்.
  முடிந்தால் மரத்தில கண்டியில கேட்டு MP ஆ வந்து காட்டுங்க என்று மைதிரி சவால் விட்டா?

 6. You can winning

 7. You can winning

 8. You can winning

 9. Super sir

 10. உனக்கு உன் சொந்த சின்னத்துல போட்டி இட்டு ஜெய்க்க துப்பில்ல இதுல சவால் விடுராரு

 11. துணிச்சல் மிக்க ,சட்டத்தறையில் மிகத்தெளிவுள்ள சாணக்கிய சண்டியரிடம்
  பெற்றுக்கொண்ட சன்மானத்திற்கு நன்றாகவே கூவுகின்றாய் .
  முஸ்லிம் என்ற வாரத்தையை முதலீடாக்கிக்கொண்ட உனக்கும், நீஎறிகின்ற எலும்புத் துண்டுகளுக்கு அலைகின்ற கூட்டத்துக்கும் உன்கூவல் மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுக்கலாம்.
  ஆனால் முஸ்லிம்களாய் அனைத்து சமூகங்களுடனும் சுமூகமாய் சமூகமாய் வாழ வேண்டுமென்று விரும்புகின்ற எங்களுக்கு
  உன்கூவல் மிகப்பெரும் இடியென்பதை முதலில் தெரிவித்துக்கொண்டு….

  இனி..
  துணிச்சலும் சட்டத்தெளிவும்பெற்ற சாணக்கியம் நீதியமைச்சராகயிருந்தபோது தான் அன்றைய சட்டமா அதிபர் ஷிரானிபண்டாரநாயக்காவின் பதவி பறிக்கப்பட்டது,?
  நுரைச்சோலைவீட்டுத்திடம் சட்டத்தெளிவும் துணிச்சலும் நிறைந்த சாணக்கியதினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் இறுதி முடிவிற்காக காத்திருக்கு?
  அளுத்கம,பேருவலை,திகன,கின்தோட்டை,அம்பாரை இன்னும் ஏராளாமான உடைக்கப்பட்ட ,மூடப்பட்ட பள்ளிகளுக்காக உச்ச நீதிமன்றில் வாதாடிக்கொண்டிருக்கிறது துணிச்சலும் சட்டத்தெளிவும் நிறைந்த சாணக்கியம்.
  தம்புள்ள பள்ளிக்கான காணியை பெற்றுக்கொடுத்து பிரச்சினை யை சுமுகமாக தீர்த்துவிட்டது துணிச்சலும் சட்டத்தெளிவும் நிறையப்பெற்ற சாணக்கியம்
  இவ்வாறான ஏராளமானவைகளை காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு முன்னால் உள்ள சமூகத்துக்கு செய்து முடித்துவிட்டு
  சவால் விட்டுக்கொள்கிறது தேர்தலுக்கு அதிலும் ஜனாதிபதி தேர்தலுக்கு.
  ஏன் முதலில் பாராளுமன்ற தேர்தலை முன்னிறித்தவில்லை.
  அதுதான் சாணக்கியம்.

  ஏகாதிபத்திய வல்லூறுகளின் ஏஜன்டை ஜனாதிபதியாக்கிவிட்டால் மக்களிடம் செல்லாமல் மிக இலகுவாக மன்றத்துக்குள் வந்து விடலாமென்ற நப்பாஷைதான்.

  ஏகாதிபத்திய

  • You are.correct bro.சிருபான்மை சமூகம் மேலும் மேலும் அடிமையாவது இவர்கள போன்ற அசியல் வாதிளால்தான்

 12. காலத்துக்காலம் சமூகத்தை அடகு வைக்கும் புரோக்கருக்கு தேசியத்தலையென்று ஒரு பெயராம். தூஊஊஊஊஊஊஊஉ

 13. Vijitharajah Shanmugarajah

  சூப்பர்

 14. Muslimhalai kattikkoduppwnum iwantaan thuvesattai uruwaakkupawanum iwantaan naalai m.r.arasangam wanthal muthalil paaipawanum iwantaan.

 15. Ewan Engata waai but islamdu wanta waai thoraka mataan fool😠

 16. இந்த முடுமயன் முஸ்லீம்கள் அடிவாங்கும் போது கூட
  இவன் இப்புடி தடமாரல்ல

 17. இவர் யாரை நம்பி சவால் விடுகிறாரோ தெரியல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>