பிரச்சினையை இழுத்தடிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் ஐ.தே.மு. கோரிக்கை


sri-lanka-president-maithripala-sirisena-and-prime-minister-ranil-wickremasinghe

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க இதன்பிறகாவது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது.

சிறுபான்மை ஆதரவுடன் உள்ள குழுவுக்கு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படின், நாட்டிலுள்ள அராஜக அரசியல் நிலைமையை தொடர்ந்தும் நீடிப்பதற்கே அது வழிவகுக்கும்.

இதனால், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக தலையிட வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>