ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு- தம்பர அமில தேரர்


Dambara Amila thero

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைந்தவுடன், அரசியல் யாப்பை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ராஜகிரிய காரியாலயத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

நாடு தவறான பாதையில் செல்கின்றது. நாடு அழிவை நோக்கிச் செல்கின்றது என தெரிவித்தே கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை ஜனாதிபதி ஏற்படுத்தினார்.

தற்பொழுது ஒரு மாதத்தையும் தாண்டியுள்ளது. நாடு தற்பொழுது சரியாகியுள்ளதா?. சர்வதேச நல்லெண்ணம் கிடைக்கப் பெற்றுள்ளதா? தேசிய நல்லிணக்கம் முன்னேற்றம் கண்டுள்ளதா? என்றும் இந்த அரசாங்கத்தை கண்டறிய மக்கள் தயாராகவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

7 comments

  1. ஏன் இப்ப வழக்கு போட்டால் என்ன.

  2. What this fellow talk nounsens

  3. Law for every ones

  4. Than you go jail behalf of president

  5. Kick out this bugeler all

  6. All must under the law mind it

  7. Becoz of this kind of fellows now the srilangka become like this worst worst

Leave a Reply to Simon James Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>