அரசாங்கத்தின் இடைக்கால நிதி அறிக்கை தோல்வியடைந்தால் அரசாங்கம் கலையுமா?- Dr.பிரதிபா


download

வரவு செலவுத் திட்டமும், இடைக்கால நிதி அறிக்கையையும் ஒன்றாக பார்க்க முடியாது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் முன்வைக்கவுள்ள இடைக்கால நிதி அறிக்கை தோல்வியடைந்தால், அரசாங்கம் கலைக்கப்படுமா? என வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

இடைக்கால நிதி அறிக்கை பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த அறிக்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதியில் இது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டு விவாதம் நடாத்தப்பட வேண்டும்.

இந்த விவாதத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இடைக்கால நிதி அறிக்கை தோல்வியடைந்தால், வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது போன்று நோக்கப்படுவதில்லை. அதாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் அரசாங்கம் கலைக்கப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலைமை உருவாக அரசியல் யாப்பில் இடம்பாடு இல்லை. இடைக்கால நிதி அறிக்கையை மீண்டும் முன்வைக்க அரசியல் யாப்பில் இடம்பாடு உள்ளது.

இருப்பினும், தொடர்ந்தும் நிதி அறிக்கை தோல்வியடையும் என காணப்பட்டால், அரசாங்கத்தைக் கொண்டு செல்ல நிதிப் பிரச்சினை ஏற்படுவதனால், புதிய நடவடிக்கையை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் கூறிப்பிட்டார். (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>