ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்ல, சட்டம் முக்கியம்- Dr.ஜயம்பதி எம்.பி.


நாட்டு வரலாற்றில் ஜனாதிபதி விரும்பாதவர்களுக்கும் பிரதமர் பதவியை வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு ஏற்ப ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அவருடன் வேலைசெய்ய முடியுமா? இல்லையா? என்பது தனிப்பட்ட விடயம். சட்ட ரீதியில் அவருக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்கு முன்னரும் ஜனாதிபதிகள் தான் விரும்பாதவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க நேரிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க 1994 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் தலைவியை சந்திரிக்கா குமாரதுங்கவை நியமித்துள்ளார்.

அதேபோன்று, சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருக்கும் போது 2004இல் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிக்க விரும்பிய போதிலும், அப்போது பாராளுமன்றத்தில் அதிகமானவர்களின் வரவேற்பைப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

எனவே, ஜனாதிபதிக்கு இவ்வாறுதான் விரும்பாதவர்களை நியமிப்பதற்கு நிறையவே வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கு பார்க்கப்பட வேண்டியது பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தையே அன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அல்ல எனவும் கலாநிதி ஜயம்பதி எம்.பி. மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

 

image_a8a249f86e

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>