ஸம் ஸம் பௌன்டேசன் அனுசரணையில் பாடசாலை உபகரணம் விநியோகம்


WhatsApp Image 2018-12-03 at 2.52.23 PM

வரகாபொல, வேவெல்தெனிய பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெரும் 350 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 03 ஆம் திகதி மினுவாங்கொட வலைய அல் ஹஸன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஸம் ஸம் பௌன்டேசன் அமைப்பின் அனுரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அத்தனகல்லை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரர், கௌரவ அதிதியாக இலங்கை முஸ்லிம் புத்தஜீவிகள் சங்கத்தின் உப தலைவர் மௌலவி யுசுப் முப்தி, சிறப்பு அதிதியாக வேவெல்தெனிய விகாரையின் விகாராதிபதி போபிடிய இந்திரகுப்த தேரர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வேவெல்தெனிய அல் ஹஸன் வித்தியாலய அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வேவெல்தெனிய சமூக நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழாவில் மினுவாங்கொட வலய கல்வி அதிகாரிகள், பிரதேச பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.   (மு)

WhatsApp Image 2018-12-03 at 2.52.22 PM WhatsApp Image 2018-12-03 at 2.52.23 PM WhatsApp Image 2018-12-03 at 2.52.26 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>