ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்தார்


Tatenda-Taibu-ICC copy

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு (Tatenda Taibu), மீண்டும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இனைந்து விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையினால் தற்போது நடத்தப்பட்டு வரும் மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் ஜிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உலக கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

ஜிம்பாப்வே அணிக்காக 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 டி-20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>