மொஹமட் ஹபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு


skysports-mohammad-hafeez-pakistan_4508556

நியூசிலாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்று வரும் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் (38 வயது) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாகத் தேசிய அணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த ஹபீஸ், கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக அவரால் அணிக்குப் பங்களிப்பை வழங்க முடியாத காரணத்தால் திடீர் எனத் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக கவனத்தை செலுத்தும் முகமாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹபீஸ், தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக்கிடம் தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 10 சதம் மற்றும் 12 அரைச்சதங்கள் அடங்கலாக 3644 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். (ஸ)

One comment

  1. Mohamed Meera Mohamed Meera

    Great cricketer,good decision

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>