யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் வைத்தியர்கள் வேடத்தில் திருட்டு


2017_06_09_01

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில், வைத்­தி­யர்கள் போன்று ஆடை அணிந்து திருட்­டுக்­களில் ஈடு­பட்டு வந்த இரு பெண்­களை அடை­யாளம் கண்டுள்­ள­தாக யாழ். போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­துள்ளார்.

சம்பவம் தொடபிரில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்;
யாழ். போதனா வைத்­தியசாலையில் கட­மை­யாற்றும் வைத்­தி­யர்கள் போன்று ஆடை அணிந்து , இதயத் துடிப்பு காட்­டி­யுடன் (டேடஸ் கோப்) இரு பெண்கள் சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நட­மா­டி­ய­தனை கண்­கா­ணிப்புக் கெம­ராக்­களின் (சி.சி.ரி.வி) உத­வி­யுடன் கண்­கா­ணித்தோம்.

அதன் போது அவர்கள் இரு­வரும் சத்­தி­ர­சி­கிச்சை கூடத்­துக்குச் சென்­ற­துடன், அதில் ஒருவர் சத்­திர சிகிச்சை கூடத்­தினுள் செல்­வ­தற்கு வைத்­தி­யர்கள் உப­யோ­கிக்கும் ஆடை­களை அணிந்து சத்­திர சிகிச்சை கூடத்­திற்குள் செல்ல முற்­பட்ட வேளை அங்­கி­ருந்த பெண் காவ­லா­ளிகள் ஊடாக அவர்­களை பிடிக்க முற்­பட்டோம்.

அவ்­வே­ளையில், ஒருவர் அங்­கி­ருந்து தப்பிச் சென்ற நிலையில், மற்­றொ­ரு­வரை மடக்கி பிடித்திருந்தோம்.

பிடிக்­கப்­பட்­ட­வ­ரிடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது, தாம் இரு­வரும் வைத்­தி­யர்கள் போன்று ஆடை அணிந்து வைத்­தியசாலையில் பல திருட்­டுக்­களில் ஈடு­பட்­ட­மையை ஒப்­புக்­கொண்­ட­துடன் வைத்­தியசாலைக்கு சொந்­த­மான பொருட்­க­ளையும் திரு­டி­யுள்­ள­தாக ஒப்­புக்­கொண்டார்.

அதே­வேளை, அப்­பெண்ணின் கைத்­தொ­லை­பே­சி­யினை வாங்கி அதனை பரி­சோ­திக்க முற்­பட்ட வேளை குறித்த பெண் எம்­மி­ட­மி­ருந்து தப்பிச் சென்று, வெளியில் தயா­ராக இருந்த ஒரு ஆணின் மோட்டார் சைக்­கிளில் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டினார்.

அதன் பின்னர் நாம் குறித்த பெண்ணின் கைத்­தொ­லை­பே­சி­யினை ஆராய்ந்து, அதில் “அம்மா” என சேமிப்பில் இருந்த இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு , ” இந்த போன் நிலத்தில் விழுந்து கிடந்­தது எடுத்தோம் ” என கூறி அதன் உரி­மை­யாளர் தொடர்பில் கேட்டோம்.

அப்­போது,, ’நாங்கள் மட்­டக்­க­ளப்பில் வசிக்­கின்றோம். எனது மகள் யாழில் தங்கியிருந்து மருத்­துவ படிப்பை மேற்­கொள்­கின்றார். அவரின் தொலை­பேசி தான் இது என கூறினார்.

அதன் பின்னர் நாம் அவரின் மகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது , அவர் எங்கும் மருத்­துவ படிப்பை மேற்­கொள்­ள­வில்லை. அவர் வீட்­டாரை ஏமாற்றி இங்கு தங்­கி­யுள்ளார் என கண்­ட­றிந்தோம்.

அதே­வேளை குறித்த பெண்ணின் கைத்­தொ­லை­பே­சியில் சேமிப்பில் இருந்த படங்­களை பார்த்த போது அதில் ஒரு ஆணுடன் ஜோடி­யாக உள்ள பல படங்கள் காணப்­பட்­டன. அந்த படங்­களில் இருந்த ஆண் தான் மோட்டார் சைக்­கிளில் பெண்ணை ஏற்­றிக்­கொண்டு தப்பிச் சென்ற ஆண் என்­ப­தனை கண்­ட­றிந்தோம்.

அதன் பின்னர் குறித்த ஆண் தொடர்பில் விசா­ரித்த போது , அவர் வல்­வெட்­டித்­து­றையை சேர்ந்­தவர் எனவும், சுன்­னாகம் பகு­தியில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்றில் பணி­யாற்­று­கின்றார் எனவும் கண்­ட­றிந்தோம் எனத் தெரிவித்தார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>