எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு – ரிஷாட் தெரிவிப்பு


Screen Shot 2018-12-06 at 4.40.29 PM

தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக  குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்குச் சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் கோட்டபாய ராஜபக்‌ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர்  அம்பாறை – மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்யத் திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எமது கட்சியின்  தவிசாளர், செயலாளர் உட்பட எம் பிக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்தனர்.

வடக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் கெபினட் அமைச்சரென்ற வகையிலும், கட்சித் தலைவனென்ற வகையிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

16 comments

 1. Fuck of maitheeri

  • என்ன Brother ஒரு சஹோதரன் இப்படி சொல்லும் போது உங்களுக்கு ஜோக்கா இறுக்குதா..? நீங்க எந்த கொல்கையில் இறுக்கிறீங்கலோ தெரியாது. ஆனால்.., Muslim களுக்கு ஏதாவது ஒரு பிரச்சிணை என்றால், அங்கே முதலில் நிக்கிறது சஹோதரர் Rishad Badiudeen தான். எங்களுக்கு நன்றி செலுத்தும் அழகிய குணமுண்டு Brother.

  • Hussain Mohamed brother ரிசாட் ஒரு அரசியல்வாதி

 2. This is calling president of srilangka threaten public people ????? Sri sena

 3. முதலில் நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்.

 4. அல்லாஹ்வை மிஞ்சி எதுவும் நடக்காது

 5. உண்மை தான். இந்த நாட்டில் நிறைய மிருகங்கள் இறுக்குது சந்தர்ப்பம் வறும் வரை காத்திக்கிட்டு.
  அண்பு சஹோதரரே.., கவலை வேண்டாம். அல்லாஹ் azza wajal உங்களையும், மற்றும் ஏனைய Muslim தலைவர்களையும் காப்பாற்றுவானாக. ஆமீண் Yaa Rab.

 6. Rencponsibility must be with his excellency our worries with you

 7. விதி எதுவோ அதுதான் நடக்கும் ஈமானின் ஒரு பகுதி

 8. We can do anything for our leader Rishan minister

 9. Thambi Ameer Ali thadi pathirem

Leave a Reply to Abdul Raheem Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>