அரச நிகழ்வுகளுக்குச் சொகுசு ஹோட்டல்கள் தடை – சுற்றுநிரூபம் வெளியீடு


maithiripala_children_wish_tamil.news.lk1

அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல

அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய
நிகழ்ச்சிகளை நடாத்துவதற்குத் தனியார் ஹோட்டல்களை, குறிப்பாகச் சொகுசு ஹோட்டல்களை
பயன்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்புரையின் பேரில் புதிய சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல கேட்போர்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் சொகுசு ஹோட்டல்களில் நடாத்துவதன் ஊடாக ஏற்படும் வீண்விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ஸ)

2 comments

  1. Waste of public peoples tax money stop immediately

  2. Waste of public peoples tax money stop immediately

Leave a Reply to Simon James Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>