ஐ.நா. தலையீட்டில் யெமன் சமாதான மாநாடு சுவீடனில்


image_326a43843f

ஐக்கிய நாடுகளின் தலையீட்டினால் யெமன் சமாதான மாநாடு சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரில் நடைபெறுகின்றது.

சவுதி ஆதரவு யெமன்  அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க் கட்சி அரசியல் குழு மற்றும் அவற்றுடன் இணைந்து போராடி வரும் ஷியாக்கள், ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

இந்த சமாதானப் பேச்சுவார்த்தை ஐக்கிய நாடுகளின் தூதுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யெமனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி மாடின் கிரபித்ஸ் தலைமை தாங்குவதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>