ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தில் உறுதி- ஜனாதிபதி


maithripala sirisena president of sri lanka

பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இட்டாலும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று கூறியது எனது தனிப்பட்ட கருத்து எனவும், அந்தக் கருத்திலேயே தான் இன்னும் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

தற்பொழுதும் தான் ஏற்கனவே தெரிவித்த அதே கருத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இன்று  (16) காலை ரணில் விக்ரமசிங்க பிரதமாராக பதவியேற்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது வருகை தந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரைத் தெரிவு செய்வதற்கு அரசியலமைப்புக்கு ஏற்ப பாராளுமன்றத்துக்கோ நீதிமன்றத்துக்கோ அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு 117 பேர் ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தில் வாக்களித்ததனால் அதனை மதிக்கின்றேன். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற வகையில் இந்த தீர்மானத்துக்கு உடன்படுகின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.   (மு)

Pre 1 Pre 2

 

One comment

  1. ஏன் பழைய செய்திகளைப் பிரசுரம் செய்கிறீர்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>