பதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் உதைபந்தாட்ட போட்டி


1

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan’s Bash 2018 – Inter Batch Futsal Tournament) கடந்த 15,16ம் திகதிகளில் பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

லீக் முறையில் நடந்த குறித்த போட்டித் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது.

குறித்த போட்டிகளில் 25 வயதுக்கு கீழ் பிரிவில் “குழு 84″ அணி சாம்பியன் ஆகவும் “குழு 87″ அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும், 25 முதல் 35 வயது வரை பிரிவில் “குழு 78″ அணி சாம்பியன் ஆகவும் “குழு 80″ அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும், 35 வயதுக்கு மேல் பிரிவில் “ஓர்கிட் அணி” சாம்பியன் ஆகவும் “குழு 64″ அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் முறையே, நப்ரின் தாஹிர் (25 வயதுக்கு கீழ் பிரிவில்), சப்ராஸ் (25 முதல் 35 வயது வரை பிரிவில்), அஸ்மி ரஷீத் (35 வயதுக்கு மேல் பிரிவில்) ஆகியோர் சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குறித்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்த போட்டியானது நீண்ட நாட்களுக்கு பிறகு அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

– ஷம்ரான் நவாஸ் –
1

2

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>