எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் ?


oil price petrol diesel

எரிபொருள் விலை இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெற்றோல், டீசல் என்பவற்றின் விலை 5 முதல் 10 ரூபாவுக்கு இடைப்பட்ட பெறுமானத்தில் குறைவடையலாம் என திரைசேறி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி சூத்திரத்தின்படி மீளாய்வு செய்யப்பட்டபோது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 85 டொலராக காணப்பட்டது. தற்பொழுது அதன் விலை 57 டொலாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தவகையில், இன்று அமுலுக்கு வரவுள்ள மீளாய்வு முடிவுகளின்படி எரிபொருள் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக சந்தையில் ஓரிரு டொலர்கள் அதிகரிக்கும் போதே உள்நாட்டில் பல பத்து ரூபாய்கள் அதிகரிக்கின்றன. டொலரின் விலையேற்றத்தையும் காரணம் காட்டி எரிபொருள் விலையை அதிகரித்த அண்மைய வரலாற்றை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்பெ்ாழுது 28 டொலர்களே ஒரு பீப்பாவுக்கு குறைவடைந்துள்ள நிலையில் எத்தனை ரூபாவால் குறைக்கப் போகின்றார்கள் என்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சர்வதேசத்தில் விலை உயரும் போது அதன் சுமையை மக்கள் மீது போட்டு வரும் அரசாங்கம், அது குறையும் போதும் அதன் நலனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். கண்துடைப்பு வேலைகளை செய்து விட்டு போலியான நியாயம் கூறினால், மக்கள் அரசாங்கத்தை நன்றாக விளங்கிக் கொள்வார்கள். தேர்தல் வரும் போது மக்களின் அந்த விளக்கம் தாக்கம் செலுத்தும் என்பது மட்டும் உண்மையாகும்.    (மு)

 

 

2 comments

  1. Ptrol115
    Deisel 90

  2. Ptrol115
    Deisel 90

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>