வித்தியாசமான முறையில் நடைபெற்ற நேற்றைய அமைச்சரவை நியமனம்


Capture

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை நேற்று (20) நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களுடன் இருந்து வழமையாக எடுக்கும் கூட்டுப் புகைப்படத்து நிற்காமல் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களுக்கு நியமனம் வழங்கியதன் பின்னர் சிறிது நேரத்தில் அனைவருக்கும் பொதுவாக வாழ்த்துத் தெரிவித்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற அமைச்சர்கள் சத்தியப்பிரமாணமும் வழமையாக இடம்பெறும் இடத்தில் அல்லாது விசேட அறையொன்றில் நிகழ்ந்துள்ளதாகவும் சத்தியப்பிரமாணம் செய்த அமைச்சர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>