உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு அரபு எழுத்தணிக் கலை தொடர்பான விசேட விரிவுரை


IMG_9996

டிசம்பர் 18ம் திகதி கொண்டாடப்படும் உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரபு எழுத்தணி தொடர்பான விசேட நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (18)கொழும்பு 07 லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்சீனாவைச் சேர்ந்த முன்னணி அரபு எழுத்தணிக் கலைஞரும் அரபு எழுத்தணி தொடர்பான சர்வதேச விரிவுரையாளருமான ஹாஜி நூர்டீனின் அரபு எழுத்தணிக் கலை தொடர்பான விசேட விரிவுரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜதந்திர அதிகாரிகள், அரசாங்கக் உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள்,ஹாஜி நூர்டீனின்பாரியார்அரபு எழுத்தணிக்கலை தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கை அரபு எழுத்தணி சங்கத்தினால் ஹாஜி நூர்டீனுக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், அரபு எழுத்தணி சங்கத்திற்கு ஹாஜி நூர்டீனினால் அரபு எழுத்தணி தொடர்பான இரு புத்தகங்களும்அன்பளிப்பு செய்யப்பட்டன.

நகர திட்டமில், நீர்வழங்கள் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு, எஸ்.எஸ்.டி.எப் நிறுவனம், நோலேஜ் பொக்ஸ் மற்றும் கேயாரிங் ஹன்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரபு எழுத்தணி சங்கம் இந்த விசேட விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.

அரபு எழுத்தணிக் கலை தொடர்பில் அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள்அது தொடர்பில் கற்றுக்கொள்வதற்காகவும்மற்றும் அதனை விருத்தி செய்யும் நோக்கிலும்இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஆரம்பிக்கப்பட்டுசெயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

–நுஸ்கி முக்தார்–
(படங்கள்: நோலேஜ் பொக்ஸ்)
DSC_0075

DSC_0083

DSC_0090

IMG_9856

IMG_9859

IMG_9868

IMG_9871

IMG_9907

IMG_9920

IMG_9921

IMG_9932

IMG_9996

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>