அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக 7 வயது சிறுவன்


Archie Schiller

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஒருநாளாவது விளையாட வேண்டும் என்ற 7 வயது சிறுவன் ஒருவனின் கனவை நனவாக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தயாராகியுள்ளது.

Archie Schiller என்ற சிறுவனுக்கே இந்த அறிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதற்கமைய இந்தியாவுக்கு எதிராக நாளை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Archie Schiller அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக களமிறங்கவுள்ளார்.

நத்தார் பண்டிகையின் மறுநாள் கைவிசேட திருநாள் என்பதுடன் அந்த நாளில் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்படுவது வரலாற்று பாரம்பரியமாகும்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Archie Schiller அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராகவும், நதன் லியோனுடன் சக சுழல்பந்துவீச்சாளராகவும் விளையாடவுள்ளார்.

இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லியின் விக்கெட்டே தனது இலக்கு என Archie Schiller தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சிறுவனுக்காக தனது விக்கெட்டை தரைவார்க்கவும் தயாராக இருப்பதாக விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

இதய நோயாளியான ஆர்ச்சி சில்லருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அடுத்த வாரம் தீவிர அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் அவரது கனவை நனவாக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் மனிதநேயமிக்க தீர்மானமொன்றை எடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

Archie Schiller அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவது அவர்களினதும், உலக ரசிகர்களினதும் மனதை கவர்ந்துள்ளது.(ஸ)

MELBOURNE, AUSTRALIA - DECEMBER 23:  Virat Kohli of India and Tim Paine of Australia along with Archie Shiller from the Make A Wish foundation who will be co-captain on Boxing Day pose with the BorderÐGavaskar Trophy ahead of the Boxing Day Test during the Indian Summer Festival Family Day at the Melbourne Cricket Ground on December 23, 2018 in Melbourne, Australia.  (Photo by Scott Barbour - CA/Cricket Australia/Getty Images)

MELBOURNE, AUSTRALIA – DECEMBER 23: Virat Kohli of India and Tim Paine of Australia along with Archie Shiller from the Make A Wish foundation who will be co-captain on Boxing Day pose with the BorderÐGavaskar Trophy ahead of the Boxing Day Test during the Indian Summer Festival Family Day at the Melbourne Cricket Ground on December 23, 2018 in Melbourne, Australia. (Photo by Scott Barbour – CA/Cricket Australia/Getty Images)

3 comments

  1. Abdul Raheem Mohamed Thowheeth

    Congratulations

Leave a Reply to Abdul Raheem Mohamed Thowheeth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>