7 வயது அவுஸ்திரேலியா டெஸ்ட் தலைவர் அணிக்கு வழங்கிய ஆலோசனை


dsc_3289_20181226100600265.jpg

இருதய நோயாளியான அவுஸ்திரேலிய 7 வயது சிறுவன் Archie Schiller இன் கனவு இன்று நனவாகியுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் ஆரம்பமான இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் Archie Schiller அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக விளையாடிவருகிறார்.

எப்படியாவது அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்படுவது Archie Schiller இன் ஒரே கனவாக இருந்தது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிருவாகத்திடம் அறிவிக்கப்பட்டபோது. அதற்கான வாய்ப்பை வழங்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முன்வந்து.

இன்றைய போட்டியின் ஆரம்பத்தில், நாணய சுழட்சியின் போது Archie Schiller அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக மைதானத்திற்கு வந்தார்.

என்றாலும் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற விராட் கோஹ்லி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட தெரிவுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் Tim Paine : ” முதலில் துடுப்பெடுத்தாடுவதே எனது இணைத்தலைவரின் நோக்கமாகக் காணப்பட்டது. என்றாலும் மைதானத்தில் சில மாற்றங்களைக் காணக்கூடியதாக இருப்பதனால் முதலில் களத்தடுப்பு கிடைக்கப்பெற்றது எமக்குச் சாதகமாக அமையும் என கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த Archie Schiller “Hit sixes and get wickets” எனத் தெரிவித்தார். (ஸ)

02 03 04 dsc_3289_20181226100600265.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>