பஸ் தரிப்பு நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த வாசு தேவநாணயக்கார எம்.பி.


image_f724d5ebbc

பொரல்லையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விட்டு, வெளியேறிச் செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முச்சக்கர வண்டிக்காக தெருவோரம் காத்திருந்த சம்பவம் ஊடகங்களில் விசேடமாக இடம்பிடித்துள்ளன.

அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவருடன் அவருடைய இடத்துக்குச் செல்வதற்கு ஊடகவியலாளர் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் பாதையில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அவர் இன்று தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் வருகை தந்திருக்க வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேரத்துக்குப் பின்னர் முச்சக்கர வண்டியொன்றுக்கு கையைக் காட்டி நிறுத்திய பின்னர் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியை முதலில் ஏறுமாறு கூறிவிட்டு, பின்னர் அவர் முச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் வாகனத்துக்காக பாதை அருகில் காத்திருக்கும் போது பிடிக்கப்பட்ட படத்தையே இங்கு காணலாம்.

பாராளுமன்றத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களும் இவ்வாறு சாதாரண வாழ்க்கை முறைக்கு தயாராகுமாக இருந்தால், மக்களின் உள்ளங்களில் அழியாத வகையில் இடம்பிடிப்பர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.  (மு)

13 comments

 1. மக்களின் உள்ளங்களில் இடம்பிடிக்க சாதாரண வாழ்க்கை முறைக்கு தயாராகத் தேவையில்லை.தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட்டாலே போதும்.

 2. தொடர்ந்தும் அப்படியே செய்தால் பாராட்டலாம்.

 3. Ewar oru nalayku eppade seidal podumaa alemattru edellam poy wesham.

 4. இவர் அவருடைய வாகனத்தில் வந்து இறங்கினால் எல்லோருக்கும் தெரியவரும் அதனால் தான்

 5. Ulaha maha nadippu

 6. நடிப்பு

 7. Padamada kaatiringa? 😄

 8. Ivan padam kaatturaan

 9. வரவேற்கிரோம்

 10. பக்கயா

 11. கெட்ட பையன் சார் இவன்… ௭ன்னம்மா நடிக்கிறான். 😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>